உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

இயேசுவுக்கு நேராக வழிநடத்தும் ஒன்றிணைக்கப்பட்ட சரித்திரமாக வேதாகமத்தை மக்கள் புரிந்துகொள்வதற்கு உதவுவதே எங்கள் நோக்கமாகும்.

வீடியோக்கள்

வேதாகமத்தின் முக்கிய கருப்பொருள்களையும், ஒவ்வொரு புத்தகத்தையும் விளக்கும் எங்களின் அனிமேஷன் (Animated) வீடியோக்களை ஆராயுங்கள். அவற்றைப் பாருங்கள், பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது பின்னர் பயன்படுத்த சேமித்துக் கொள்ளுங்கள்.

எங்களைப் பற்றி

BibleProject குழுவின் புகைப்படத் தொகுப்பு: ஊழியர்கள் ஒன்றுகூடல், ஓவியம் வரையும் கலைஞர், வீடியோ தயாரிப்புக் களம் மற்றும் நிறுவனர்கள் Tim Mackie, Jon Collins.

பைபிள் ப்ராஜெக்ட் (BibleProject) என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள, இலாப நோக்கமற்ற (Nonprofit), மக்களின் நன்கொடைகளால் (Crowdfunded) ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பாகும். மக்கள் வேதாகமத்தை இயேசு கிறிஸ்துவை நோக்கி வழிநடத்தும் ஒரே தொடர்ச்சியான சரித்திரமாக அனுபவிக்க உதவும் வளங்களை (Resources) நாங்கள் உருவாக்குகிறோம். வேதாகமத்தில் உள்ள ஆழமான மற்றும் கடினமான கருத்துக்களை, வேதாகமத்தை மேலும் அறிய விரும்பும் அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் அணுகக்கூடியதாகவும் வழங்குவதே எங்களின் நோக்கமாகும். உலகளாவிய திருச்சபையை மனதில் கொண்டு எங்களின் அனைத்து வளங்களையும் உருவாக்குகிறோம். எங்களுடன் பணியாற்றும் வேதாகம அறிஞர்கள் (Bible Scholars) பல்வேறு கிறிஸ்தவ மரபுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதிகமான மக்கள் வேதாகமத்தின் ஒருமைப்பாட்டை உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே அர்ப்பணிப்பில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில், நீண்டகால நண்பர்களான டாக்டர் டிம் மேக்கி (Dr. Tim Mackie) மற்றும் ஜான் காலின்ஸ் (Jon Collins) ஆகியோர், வேதாகம ஆராய்ச்சியையும் (Biblical Scholarship) பட காட்சிக் கதைசொல்லலையும் (Visual Storytelling) ஒன்றிணைத்து, மக்கள் வேதாகமத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் ஆங்கிலத்தில் இலவச வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினர். அதன் பின்னர், BibleProject 140-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. உலகம் முழுவதும் உள்ள தாய்மொழி பேசுவோர்களின் மற்றும் பல குழுக்களின் ஒத்துழைப்புடன், 50-க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் வட்டார மொழிகளில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேதாகமத்தை அணுகுவதில் (Approach to Scripture) எங்களின் அணுகுமுறையைப் பற்றி மேலும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

நாங்கள் உருவாக்கும் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. உங்களைப் போன்ற தாராளமான ஆதரவாளர்களின் நன்கொடைகளே இதை சாத்தியமாக்குகின்றன.

நன்கொடை வழங்க

நாங்கள் உருவாக்கும் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. உங்களைப் போன்ற தாராளமான ஆதரவாளர்களின் நன்கொடைகளே இதை சாத்தியமாக்குகின்றன.