Back

பயன்பாட்டு விதிமுறைகள்

BibleProject

செப்டம்பர், 2019 புதுப்பிக்கப்பட்டது

BibleProject க்கு உங்களை வரவேற்கிறோம் -- உங்கள் வருகையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!

நாங்கள் தயாரிப்பதை முடிந்தவரை உலகெங்கிலும் உள்ள பல மக்களுடனும் குழுக்களுடனும் பகிர்ந்து கொள்வதில் BibleProject நம்பிக்கை கொண்டுள்ளது. வேதாகமம் குறித்த அறிவையும் கலந்துரையாடலையும் முன்னெடுத்துச் செல்வதற்காக எங்களின் வீடியோக்கள், போஸ்டர்கள், குறிப்புகள் மற்றும் பிற உள்ளடக்கங்களை மதத்தலைவர்களும் கல்வியாளர்களும் கட்டணமின்றிப் பயன்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இந்தப் பயன்பாட்டு விதிமுறைகள் (சில நேரங்களில் வெறுமனே "விதிமுறைகள்" எனக் குறிப்பிடப்படுகின்றன) அந்த இலக்கை அடைவதையும், அதே நேரத்தில் தவறான பயன்பாடு அல்லது முறைகேட்டிலிருந்து எங்களின் உள்ளடக்கம் மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. எங்களின் படைப்புகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தின் சட்டங்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இலாபநோக்கற்ற நிறுவனமாக உள்ளோம், ஆனாலும் ஓர் உலகளாவிய பார்வையைக் கொண்டிருக்க முயற்சிக்கிறோம். இந்த விதிமுறைகளில், "நாங்கள்", "எங்களுக்கு", "எங்கள்", "TBP", "The Bible Project" அல்லது "BibleProject" என்று நாங்கள் எங்களைக் குறிப்பிடலாம்.

இந்த விதிமுறைகளும் எங்கள் தனியுரிமை அறிவிப்பும் இணைந்து, எங்கள் வலைத்தளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், சேனல்கள் மற்றும் TBP இன் பிற எந்த இணைய இருப்பு (கூட்டாக, "வலைத்தளம்") ஆகியவற்றின் உங்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன. வலைத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்னர் இந்த விதிமுறைகளைக் கவனமாகப் படியுங்கள்.

  1. ஏற்பு

  1. கண்ணோட்டம்

  1. பதிவு

  1. அறிவுசார் சொத்துரிமை

  1. TBP வர்த்தக முத்திரைகள்

  1. வலைத்தளம் மற்றும் உள்ளடக்கத்தின் உங்கள் பயன்பாடு

  1. வலைத்தளம் மற்றும் உள்ளடக்கத்தின் உங்கள் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகள்

  1. பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்

  1. வலைத்தளப் பாதுகாப்பு

  1. வலைத்தளப் பயன்பாட்டை மாற்றுதல், இடைநிறுத்தல் அல்லது முடித்தல்

  1. தனியுரிமை மற்றும் தகவல் தொடர்புகள்

  1. ஆளுகைச் சட்டம்

  1. உரிமை விலக்கு

  1. உத்தரவாதத்தின் பொறுப்புத் துறப்பு

  1. பொறுப்பின் வரம்பு

  1. இழப்பீடு

  1. இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளுக்கான திருத்தங்கள்

  1. நடுவர் தீர்ப்பு ஒப்பந்தம்

ஏற்பு

எங்கள் சேவைகளை அணுக, உலாவ அல்லது பயன்படுத்துவதற்கு, நீங்கள் வலைத்தளம், உள்ளடக்கம் (கீழே வரையறுக்கப்படுகிறது), அல்லது எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் காலம் வரை நிபந்தனையின்றி இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருக்க நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது. உங்களின் ஏற்பு, ஒரு கட்டுப்படுத்தும் சட்ட ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. வலைத்தளம் மற்றும் உள்ளடக்கத்தின் உங்கள் பயன்பாடு தொடர்பில் உங்களுக்கும் BibleProjectக்கும் இடையேயான ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் எங்களின் விதிமுறைகள் நிறுவுகின்றன, மேலும் இது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்குச் செயல்படுகிறது. எங்களின் விதிமுறைகளில் உள்ள ஏதாவது உரிமை அல்லது விதியை நாங்கள் பயன்படுத்த அல்லது செயற்படுத்தத் தவறினால், அது அத்தகைய உரிமை அல்லது விதிக்கு நாங்கள் விலக்களித்ததாக அமையாது.

இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் குறித்து உங்களுக்கு ஏதாவது கேள்விகள், கருத்துகள் அல்லது கவலைகள் இருந்தால், webmaster@jointhebibleproject.com அல்லது (855) 700-9109 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கண்ணோட்டம்

BibleProject எந்தவொரு குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவு அல்லது மரபின் ஒரு பகுதி அல்ல. தங்களின் மத நம்பிக்கை அல்லது மதமற்ற நம்பிக்கைகளைக் கருதாமல், அனைத்துப் பின்னணிகளிலிருந்து வரும் மக்களும் எங்கள் பணியின் விழுமியத்தைக் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு குறிப்பிட்ட கிறிஸ்தவ மரபின் தனித்துவமான போதனைகளைப் பரப்புவது எங்களின் இலக்கு அல்ல, மாறாக வேதாகமத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரச் சூழலைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட அதன் கவிதை மற்றும் விவரிப்பை மையப்படுத்திய வாசிப்பிலிருந்து வெளிப்படும் இறையியல் கருப்பொருட்களையும் கருத்துக்களையும் ஆராய்வதே எங்களின் இலக்காகும். சில நேரங்களில், வேதாகமத்தின் பகுதிகளை நாங்கள் ஆராய நேரலாம், அதில் எங்கள் பொருள் விளக்கங்களும் இறையியல் கடப்பாடுகளும் தெளிவாகத் தெரியலாம், ஆனால் வேத வசனங்களின் கதையும் இறைக்கூற்றுகளும் தாமாக உரையாட அனுமதிப்பதுவே எங்களின் முதன்மை இலக்கு ஆகும்.

வேதாகமத்திற்கு விளக்கமளிப்பதில் மற்றும் அந்த விளக்கப் பணிக்கான வளங்கள் வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில் கிறிஸ்துவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்க நாங்கள் உறுதிபூண்டுள்ள காரணத்தால், ஒரு கருத்தை நிரூபிப்பதற்காக எங்கள் உள்ளடக்கத்தை அதன் பின்னணிச் சூழலிலிருந்து பிரிக்கும் மக்களைக் குறித்து நாங்கள் குறிப்பாகக் கவலை கொள்கிறோம். மேலும், நாங்கள் இலாப நோக்கற்ற நிறுவனமாக இருப்பதால், எங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு தனிநபரோ நிறுவனமோ இலாபம் சம்பாதிப்பதை ஆட்சேபிக்கிறோம். எங்கள் உள்ளடக்கத்திலிருந்து இலாபம் பெற முயற்சிப்பது, அல்லது உள்ளடக்கத்தின் செய்தி, முடிவுகள், அனுமானம், அல்லது சாராம்சத்தை மாற்றும் வகையில் எங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது, இந்த விதிமுறைகளை மீறுவதாக அமையும், மேலும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமையை முடிவுக்குக் கொண்டுவரும்.

எங்களின் வீடியோக்கள், போஸ்டர்கள், குறிப்புகள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஒலிப் பதிவுகள், மற்றும் bibleproject.com போன்ற எங்கள் வலைத்தளத்தில் காணப்படும் ஏதாவது பிற உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடு, அத்துடன் எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது எங்கள் YouTube மற்றும் Vimeo சேனல்கள் போன்ற எங்களின் ஊடக ஸ்ட்ரீமிங் பக்கங்களில் உள்ள அதுபோன்ற ஏதாவது உள்ளடக்கம் (கூட்டாக, "உள்ளடக்கம்") ஆகியவற்றின் உங்கள் பயன்பாட்டிற்கு இந்த விதிமுறைகள் பொருந்தும். இந்த விதிமுறைகளில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளதைத் தவிர வேறு எதற்காகவும் உள்ளடக்கம் பயன்படுத்தப்படக் கூடாது. TBP க்கு ஹோஸ்டிங் அல்லது பிற சேவைகளை பிற நிறுவனங்கள் வழங்கும் அளவிற்கு (கூட்டாக, "சேவை வழங்குநர்கள்"), உள்ளடக்கங்கள் தோன்றும் எந்தவொரு வலைத்தளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், சேனல்கள் அல்லது இணைய இடங்களில் அந்தச் சேவை வழங்குநர்களின் பயன்பாட்டு விதிமுறைகள் பொருந்தும், அந்த விதிமுறைகளுடன் கூடுதலாக இந்த விதிமுறைகள் செயல்பட வேண்டும் எனக் கருதப்படுகிறது.

எங்கள் வலைத்தளம் அல்லது சேவைகளை அணுக, உலாவ அல்லது பயன்படுத்த, நிபந்தனையின்றி இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருக்க நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், உள்ளடக்கம் அல்லது வலைத்தளம் அல்லது அவை வழங்கும் எந்தவொரு சேவைகள் அல்லது செயற்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

பதிவு

TBP இன் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த பொதுவான தகவல்களை எங்கள் வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது. செய்தி மடல்களையும் பிற தகவல்களையும் பெற, இணையத்தில் வாங்க அல்லது நன்கொடை வழங்க, குறிப்பிட்ட உள்ளடக்கத்தை அணுக அல்லது பயன்படுத்த, அல்லது வலைத்தளத்தின் பிற அம்சங்களை அணுக மற்றும் பயன்படுத்த நீங்கள் எங்களுடன் பதிவு செய்யலாம், இவை அனைத்தும் இந்த விதிமுறைகளின் கீழ் அமையும். எங்களுடன் பதிவு செய்வதன் மூலம், (அ) TBP உடன் பிணைக்கும் ஒப்பந்தத்தை உங்களால் உருவாக்க இயலும் அல்லது உருவாக்குவதற்குப் பொருத்தமான அதிகாரம் மற்றும் அங்கீகாரம் இருக்கிறது என்றும்; (ஆ) உங்களைப் பற்றி நீங்கள் வழங்கும் தகவல்கள் உண்மையானவை, துல்லியமானவை, நடப்பில் உள்ளவை, முழுமையானவை என்றும்; (இ) வலைத்தளத்தின் வரையறுக்கப்பட்ட-அணுகல் பகுதிகளைப் பயன்படுத்த நாங்கள் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கைச் சான்றுகளை (கிரடென்சியல்) மட்டுமே பயன்படுத்துவீர்கள் என்றும்; நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஏதாவது காரணத்திற்காக வலைத்தளத்திற்கான உங்கள் அணுகலை TBP ஏற்கனவே நிறுத்தியிருந்தால், நீங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் வலைத்தளத்தை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது.

நீங்கள் எங்களுடன் பதிவு செய்தால், உங்களின் கணக்கு கடவுச்சொல் (அவற்றின் இரகசியத்தைப் பாதுகாப்பது உட்பட) மற்றும் உங்களின் அனுமதியுடனோ அனுமதியில்லாமலோ உங்கள் கணக்கு மற்றவர்களால் பயன்படுத்தப்படுவது தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். உங்களின் கணக்கைப் பயன்படுத்தும் மற்றவர்களும் இந்த விதிமுறைகளுடன் இணங்குவதை உறுதி செய்வதற்குப் பொறுப்பேற்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கணக்கின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் எந்தவொரு இழப்புகளுக்கும் BibleProject பொறுப்பாகாது.

நீங்கள் உங்கள் கணக்கின் எந்தவொரு பாதுகாப்பு மீறல் அல்லது அங்கீகரிக்கப்படாத பயன்பாடு குறித்தும் "அங்கீகரிக்கப்படாத பயன்பாடு" என்ற பொருள் வரியுடன் webmaster@jointhebibleproject.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் எங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் எங்களிடம் தெரிவித்தாலும், உங்கள் கணக்கின் பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் ஏதாவது குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட உங்களின் அணுகல் நம்பிக்கைச் சான்றுகளைப் (கிரடென்சியல்) பயன்படுத்தி நிகழும் எந்தவொரு செயல்பாடுகளுக்கும் நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். எந்த நேரத்திலும் அறிவிப்பின்றி வலைத்தளம் அல்லது அதன் ஏதாவது பகுதிக்கான உங்களின் அணுகலை எங்கள் தனிப்பட்ட விருப்பப்படி நிறுத்துவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது.

அறிவுசார் சொத்துரிமை

உள்ளடக்கத்தில் உள்ள பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், மற்றும் பிற அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் மென்பொருள், உரை, கிராபிக்ஸ், லோகோக்கள், பொத்தான் ஐகான்கள், படங்கள், ஒலித்துணுக்குகள், வீடியோ துணுக்குகள், தரவுத் தொகுப்புகளும் திரட்டுகளும், வலைத்தளத்தின் தொகுப்பும் ஒட்டுமொத்த வடிவமைப்பும் உள்ளிட்டவை மட்டுமன்றி வலைத்தளத்தில் உள்ள பிற எந்தவொரு தகவல்களும் (கூட்டாக, "அறிவுசார் சொத்து"), TBPக்கு சொந்தமானவை அல்லது உரிமமுடையவை, மேலும் அறிவுசார் சொத்து தொடர்பான அனைத்து உரிமைகளையும் நாங்கள் வைத்துள்ளோம்.

TBP வர்த்தக முத்திரைகள்

குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக இந்த விதிமுறைகளின் கீழ்க் குறிப்பிட்ட உள்ளடக்கத்தில் உள்ள பதிப்புரிமைகள் உரிமம் வழங்கப்பட்டாலும், இந்த விதிமுறைகள் மூலம் வர்த்தக முத்திரை அல்லது சேவை முத்திரை உரிமம் எதுவும் உங்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் பொருள், எங்களின் பெயர், லோகோ அல்லது பிற எந்தவொரு TBP அடையாளங்காட்டியையும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் நியாயப் பயன்பாடு மேற்கோளாகத் தகுதி பெறாத எந்தவொரு முறையிலும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதாகும். இதனால் TBP மற்றும் எங்கள் உள்ளடக்கப் பயனர்களுக்கிடையேயான உறவு குறித்து எவரும் குழப்பமடைய மாட்டார்கள், எடுத்துக்காட்டாக தனி ஒப்பந்தத்தின் கீழ் இல்லாமல் இந்த விதிமுறைகளின் கீழ் மட்டுமே உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் ஒருவரை TBP விளம்பரப்படுத்துவதாகவோ ஆதரிப்பதாகவோ நம்புவதற்கு இது வழிவகுக்காது. நியாயப் பயன்பாடு மேற்கோளைத் தாண்டி எங்களின் வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், சிறப்பு பயன்பாட்டு உரிமத்தைக் கோருவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அத்தகைய உரிமங்கள் பொதுவானவை அன்று, ஆனால் சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் வழங்கப்படலாம். முறையாக அங்கீகரிக்கப்பட்ட எங்களின் அதிகாரிகளில் ஒருவர் கையெழுத்திட்ட முறையான எழுத்துப்பூர்வ உரிம ஒப்பந்தத்தில் மட்டுமே எங்களின் எந்தவொரு முத்திரையைப் பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்கப்படும். எங்களின் எந்தவொரு முத்திரைப் பயன்பாட்டிற்கான எந்தவொரு உரிமைகள் வழங்குவதற்காக அல்லது அங்கீகரிப்பதற்காக வேறு எந்தவொரு நபருக்கோ முகவருக்கோ அங்கீகாரம் வழங்கப்படவில்லை, மேலும் அதுபோன்ற முயற்சிகள் அல்லது அது தொடர்பான உறுதிமொழி அல்லது வழிகாட்டுதல்கள் செல்லாதவை ஆகும்.

வலைத்தளம் மற்றும் உள்ளடக்கத்தின் உங்கள் பயன்பாடு

வலைத்தளத்தின் ஒரு பயனராக, இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி வலைத்தளத்தை அணுகுவதற்கான, வலைத்தளத்தில் உள்ள தகவல்களைப் பார்ப்பதற்கான மற்றும் வலைத்தளத்துடன் ஊடாடுவதற்கான, திரும்பப்பெறக்கூடிய, மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். உள்ளீடுகள் தேவைப்படும் எந்த ஊடாடும் கூறுகள் உட்பட வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், (அ) வலைத்தளத்தில் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு தகவல்களும் உண்மையானவை துல்லியமானவை என்றும்; (ஆ) அந்தத் தகவல்களின் துல்லியத்தை நீங்கள் பராமரிப்பீர்கள் என்றும்; (இ) வலைத்தளத்தின் உங்கள் பயன்பாடு எந்தவொரு பொருந்தும் சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறையை மீறவில்லை என்றும் நீங்கள் குறித்துக்காட்டி உத்தரவாதம் அளிக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கும் எந்தவொரு தகவலும் எங்களின் தனியுரிமை அறிவிப்பிற்கு உட்பட்டதாகும்.

எந்தவொரு வணிக நோக்கத்திற்காகவோ சட்டவிரோதமான அல்லது தவறான நோக்கத்திற்காகவோ நீங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறைகளால் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டவை தவிர்த்து வலைத்தளம் அல்லது அதன் ஏதாவது பகுதி அல்லது கூறைப் (உள்ளடக்கம் உட்பட) பயன்படுத்த, வாடகைக்கு விட, மீண்டும் அனுப்ப, நகலெடுக்க, வெளிப்படுத்த, வெளியிட, விற்க, ஒதுக்கீடு செய்ய, குத்தகைக்கு விட, துணை உரிமம் வழங்க, சந்தைப்படுத்த அல்லது பரிமாற்றம் செய்ய மாட்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் வலைத்தளம் அல்லது வலைத்தளத்தின் எந்தவொரு பகுதியையும் பிரதியெடுக்க, தலைகீழ் பொறியாக்கம் செய்ய, மொழிபெயர்க்க, கடத்த, மாற்றியமைக்க அல்லது வழிப் படைப்புகளை உருவாக்க மாட்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். வலைத்தளத்தில் மாற்றம் செய்வது, வலைத்தளத்தில் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் பிற சட்டவிரோதமான நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன, மேலும் தவறு செய்பவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

வீடியோ உள்ளடக்கம். எங்களின் www.bibleproject.com தளத்திலிருந்து அல்லது எங்களின் YouTube (https://www.youtube.com/user/jointhebibleproject) அல்லது Vimeo (https://vimeo.com/channels/1241213) சேனல்களிலிருந்து அல்லது எதிர்காலத்தில் எங்களால் உருவாக்கப்படும் அதுபோன்ற பிற சேனல்களிலிருந்து எங்களின் வீடியோக்களில் சில (கூட்டாக, "வீடியோ உள்ளடக்கம்") பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. எங்களின் வீடியோ உள்ளடக்கத்தை நீக்கும்படி நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்தாத வரை, இந்த விதிமுறைகளுக்குக் குறிப்பாகப் பின்வரும் தேவைகளுக்கு நீங்கள் கண்டிப்புடன் இணங்கும் வரையில் மட்டும், உங்கள் சொந்த வலைத்தளம் அல்லது மொபைல் செயலியில் எங்களின் எந்தவொரு வீடியோ உள்ளடக்கத்தின் ஸ்ட்ரீம்களையோ இணைப்புகளையோ உட்பொதிக்க நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்:

  • உங்கள் வலைத்தளம் அல்லது செயலியின் பயனர்கள் வீடியோ உள்ளடக்கத்தை அணுகுவதற்கான முன்-நிபந்தனையாக, உங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையோ அல்லது உங்களுக்கு மறைமுகப் பணப்பலனுக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலோ செயலின்மையோ தேவைப்படுவதாக இருக்கக் கூடாது.

  • நீங்கள் வீடியோ உள்ளடக்கத்தின் நகல்களை விற்கவோ விநியோகிக்கவோ கூடாது.

  • வீடியோ உள்ளடக்கத்திற்கு மிக அருகில் வீடியோ உள்ளடக்கத்தின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் BibleProject என அடையாளப்படுத்தும் வகையிலும், BibleProject குறித்து பார்வையாளர்கள் மேலும் அறிந்துகொள்வதற்காக தளத்திற்குச் செல்லும் வகையில் www.bibleproject.com இணைப்பும் கொண்ட ஒரு தெளிவான மற்றும் முக்கியமான அறிவிப்பை நீங்கள் வைக்க வேண்டும்.

  • நீங்கள் ஏதாவது வீடியோ உள்ளடக்கத்தில் தொகுப்போ, திருத்தமோ அல்லது எந்த வகை மாற்றங்களையும் செய்யக் கூடாது, அல்லது வீடியோ உள்ளடக்கத்தின் அடிப்படையில் எந்தவொரு வழிப்படைப்புகளையும் உருவாக்கக்கூடாது.

  • நாங்கள் வழங்குபவற்றைத் தவிர்த்து, புதிய சேவையகம் அல்லது ஸ்டிரீமிங் சேவையில் நீங்கள் எந்த வீடியோ உள்ளடக்கத்தையும் பதிவேற்றக்கூடாது.

போஸ்டர்கள். எங்களின் www.bibleproject.com தளத்தில் எங்களின் போஸ்டர்களில் சில (கூட்டாக, "போஸ்டர்கள்") பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. இந்த அனுமதியை நாங்கள் திரும்பப் பெறும் வரை, இந்த விதிமுறைகளுக்குக் குறிப்பாகப் பின்வரும் தேவைகளுக்கு நீங்கள் கண்டிப்புடன் இணங்கும் வரையில் மட்டும், டிஜிட்டல் முறையில் அல்லது வழக்கமான ஊடக வடிவில் எங்களின் எந்தவொரு போஸ்டர்களையும் பதிவிறக்கம் செய்ய, மீளுருவாக்கம் செய்ய, காட்சிப்படுத்த நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்:

  • மூன்றாம் தரப்பினர் போஸ்டர்களைப் பார்ப்பதற்கான முன்-நிபந்தனையாக, உங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையோ அல்லது உங்களுக்கு மறைமுகப் பணப்பலனுக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலோ செயலின்மையோ தேவைப்படுவதாக இருக்கக் கூடாது, அல்லது நீங்கள் போஸ்டர்களின் நகல்களை விற்பனை செய்யக்கூடாது.

  • நீங்கள் மேலே உள்ள விற்பனைக் கட்டுப்பாட்டிற்கு இணங்கும் வரை, ஒவ்வொரு வெவ்வேறு போஸ்டர்களின் 500 காகித நகல்கள் வரை உருவாக்கி விநியோகம் செய்யலாம், எனவே அனைத்துப் போஸ்டர்களும் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும். (ஒரு போஸ்டரை 500 அல்லது அதற்கு மேற்பட்ட நகல்கள் தயாரிக்க நீங்கள் விரும்பினால், சிறப்பு உரிமத்தைக் கோர எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.)

  • நீங்கள் ஏதாவது போஸ்டரில் தொகுப்போ, திருத்தமோ அல்லது எந்த வகை மாற்றங்களையும் செய்யக் கூடாது, அல்லது போஸ்டர்களின் அடிப்படையில் எந்தவொரு வழிப்படைப்புகளையும் உருவாக்கக்கூடாது.

  • டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்திய போஸ்டர்களின் மிக அருகில் போஸ்டர்களின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் BibleProject என அடையாளப்படுத்தும் வகையிலும், BibleProject குறித்து பார்வையாளர்கள் மேலும் அறிந்துகொள்வதற்காக தளத்திற்குச் செல்லும் வகையில் www.bibleproject.com இணைப்பும் கொண்ட ஒரு தெளிவான மற்றும் முக்கியமான அறிவிப்பை நீங்கள் வைக்க வேண்டும்.

நாங்கள் இந்த அனுமதியைத் திரும்பப்பெற்றால், நீங்கள் டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்திய போஸ்டர்கள் அனைத்தையும் கண்டிப்பாக நீக்க வேண்டும், மேலும் வழக்கமான ஊடக வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட போஸ்டர்களின் விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

பிற காட்சி உள்ளடக்கம். எங்களின் www.bibleproject.com தளத்தில் போஸ்டர்களைத் தவிர எங்களின் குறிப்புகள், எழுத்துப்படிகள் மற்றும் நிலையான காட்சி உள்ளடக்கங்களில் சில (கூட்டாக, "பிற காட்சி உள்ளடக்கம்") பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. இந்த அனுமதியை நாங்கள் திரும்பப் பெறும் வரை, இந்த விதிமுறைகளுக்குக் குறிப்பாகப் பின்வரும் தேவைகளுக்கு நீங்கள் கண்டிப்புடன் இணங்கும் வரையில் மட்டும், டிஜிட்டல் முறையிலோ அல்லது வழக்கமான ஊடக வடிவில் ஒருமுறையோ எங்களின் பிற காட்சி உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்ய, மீளுருவாக்கம் செய்ய, காட்சிப்படுத்த நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்:

  • மூன்றாம் தரப்பினர் பிற காட்சி உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கான முன்-நிபந்தனையாக, உங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையோ அல்லது உங்களுக்கு மறைமுகப் பணப்பலனுக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலோ செயலின்மையோ தேவைப்படுவதாக இருக்கக் கூடாது, அல்லது நீங்கள் பிற காட்சி உள்ளடக்கத்தின் நகல்களை விற்பனை செய்யக்கூடாது.

  • நீங்கள் வழக்கமான ஊடக வடிவில் பிற காட்சி உள்ளடக்கத்தின் பல பிரதிகளை உருவாக்கக் கூடாது.

  • நீங்கள் ஏதாவது பிற காட்சி உள்ளடக்கத்தில் தொகுப்போ, திருத்தமோ அல்லது எந்த வகை மாற்றங்களையும் செய்யக் கூடாது, அல்லது பிற காட்சி உள்ளடக்கத்தின் அடிப்படையில் எந்தவொரு வழிப்படைப்புகளையும் உருவாக்கக்கூடாது.

  • டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்திய பிற காட்சி உள்ளடக்கத்தின் மிக அருகில் பிற காட்சி உள்ளடக்கத்தின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் BibleProject என அடையாளப்படுத்தும் வகையிலும், BibleProject குறித்து பார்வையாளர்கள் மேலும் அறிந்துகொள்வதற்காக தளத்திற்குச் செல்லும் வகையில் www.bibleproject.com இணைப்பும் கொண்ட ஒரு தெளிவான மற்றும் முக்கியமான அறிவிப்பை நீங்கள் வைக்க வேண்டும்.

நாங்கள் இந்த அனுமதியைத் திரும்பப்பெற்றால், நீங்கள் டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்திய பிற காட்சி உள்ளடக்கம் அனைத்தையும் கண்டிப்பாக நீக்க வேண்டும், மேலும் வழக்கமான ஊடக வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட பிற காட்சி உள்ளடக்கத்தின் விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

பாட்காஸ்ட்கள். எங்களின் www.bibleproject.com தளத்திலும், பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் எங்களின் பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஆடியோ உள்ளடக்கத்தில் சில (கூட்டாக, "ஆடியோ உள்ளடக்கம்") ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கின்றன. எங்கள் தளத்திலிருந்து அல்லது Apple Podcasts, Google Podcasts, Spotify போன்ற அங்கீகரிக்கப்பட்ட சேவைகளிலிருந்து (அங்கீகரிக்கப்பட்ட சேவைகளின் எந்தவொரு தேவைகளுக்கும் நீங்கள் இணங்கும் வரை) ஆன் டிமாண்ட் முறையில் எங்களின் ஆடியோ உள்ளடக்கத்தை இயக்க நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், எங்களின் ஆடியோ உள்ளடக்கத்தைப் பதிவு செய்ய, மீளுருவாக்கம் செய்ய, மறு ஒளிபரப்பு செய்ய அல்லது வேறு ஏதாவது வகையில் பயன்படுத்த இந்த விதிமுறைகளின் கீழ் நீங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலே அனுமதிக்கப்பட்டதைத் தவிர வேறு வகையில் எங்கள் ஆடியோ உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், சிறப்பு பயன்பாட்டு உரிமத்திற்கு ஏற்பாடு செய்ய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வலைத்தளம் மற்றும் உள்ளடக்கத்தின் உங்கள் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகள்

வலைத்தளத்தை அணுகுவது, இந்த விதிமுறைகளால் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்தவொரு வகையிலும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பயன்படுத்த உங்களுக்கு அதிகாரம் அளிக்காது. மேற்கூறியவற்றிற்கு வரம்பிடாமல், இந்த விதிமுறைகளால் குறிப்பாக அனுமதிக்கப்பட்டால் தவிர, எந்தச் சூழ்நிலைகளிலும் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக் கூடாது:

  • உள்ளடக்கத்தில் குறிக்கப்பட்ட ஏதாவது பதிப்புரிமை, வர்த்தக முத்திரை அல்லது பிற தனியுடைமை அறிவிப்புகள் அல்லது ஏதாவது டிஜிட்டல் மேலாண்மை இயக்கமுறை, சாதனம் அல்லது பிற உள்ளடக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாகவோ அல்லது பிற வழிகளிலோ அகற்றுதல், மாற்றுதல், தாண்டுதல், தவிர்த்தல், குறுக்கிடுதல் அல்லது மீறுதல்;

  • வலைத்தளத்தின் எந்தவொரு அம்சத்தையும் மிரர் செய்தல், திரைச் சுரண்டல் அல்லது ஆழ இணைப்புச் செய்தல் அல்லது எங்களால் வழங்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்டதைத் தவிர்த்து வேறு தொழினுட்பம் அல்லது வழிகளில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகுதல்;

  • "ரோபோக்கள்", "ஸ்பைடர்கள்", "ஆப்லைன் ரீடர்கள்"உள்ளிட்டவை மட்டுமல்லாமல், ஏதாவது தானியக்க அமைப்பு மூலமாக வலைத்தளத்தை அணுகுதல் அல்லது எங்களின் உட்கட்டமைப்பில் நியாயமற்ற அல்லது அளவில் பெரிய சுமையை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய ஏதாவது செயல்பாடுகளைச் செய்தல் (எங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது);

  • வலைத்தளத்தில், தெரிந்தோ அல்லது பொறுப்பற்ற முறையிலோ தவறான தரவுகளைப் பதிவேற்றம் செய்தல் அல்லது தீங்கு விளைவிப்பவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வைரஸ்கள், வோர்ம்கள், ட்ரோஜன் குதிரைகள் அல்லது பிற மால்வேர் அல்லது மென்பொருள் காரணிகளை அறிமுகப்படுத்துதல், அல்லது எங்களின் அமைப்பு அல்லது வலைப்பின்னலை அனுமதியின்றி மாற்றுவது, முடக்குவது, சேதப்படுத்துவது, தாக்குவது, சுரண்டுவது அல்லது ஊடுருவுவது, அல்லது BibleProject அல்லது இணைக்கப்பட்ட வலைப்பின்னல்களின் அமைப்பு ஒருங்கமைவு அல்லது பாதுகாப்பில் குறுக்கிட அல்லது சமரசம் செய்ய முயற்சித்தல், அல்லது வலைத்தளத்தின் சரியான செயல்பாட்டையும் எந்தவொரு நபரின் அல்லது நிறுவனத்தின் பயன்பாடு அல்லது மகிழ்ச்சியையும் பாதிக்கும் ஏதாவது நடவடிக்கையை எடுத்தல்;

  • வலைத்தளத்தின் பாதுகாக்கப்பட்ட அல்லது பொதுவில் இல்லாத பகுதிகளுக்குள் ஹேக் செய்தல் அல்லது புவியிடஞ்சார்-தடை வழிமுறைகளை மீறுதல் போன்ற வலைத்தளத்தின் அணுகல் அல்லது பயன்பாட்டைத் தடுக்க அல்லது தடை செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளைத் தாண்டுதல்;

  • கணக்கின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட ஏதாவது தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க வலைத்தளத்தைப் பயன்படுத்துதல், அல்லது எங்களின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி ஏதாவது வணிகக் கோரிக்கை நோக்கங்களுக்காக வலைத்தளத்தைப் பயன்படுத்துதல்; அல்லது 

  • வலைத்தளத்தின் எந்தவொரு அம்சத்தையும் தலைகீழ் பொறியாக்கம் செய்ய முயற்சித்தல் அல்லது வலைத்தளத்தை செயற்படுத்தும் அல்லது பின்னணியில் இருக்கும் மூல நிரலைப் பெற முயற்சித்தல் (கருவிகள், முறைமைகள், செயல் முறைகள் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட), உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி ஏதாவது வழிப் படைப்புகள் அல்லது உள்ளடக்கங்களை உருவாக்குதல், வழி உள்ளடக்கங்களை நீங்கள் இலவசமாகக் கொடுக்க நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் சரியே, அல்லது வலைத்தளத்தின் ஏதாவது அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு தொழிலைக் கட்டமைத்தல்.

இந்த விதிமுறைகளின் ஏதாவது விதியை நீங்கள் மீறினால், இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள அனுமதிகள் தானாகவே நிறுத்தப்படும். இந்த விதிமுறைகளால் வெளிப்படையாக அனுமதிக்கப்படாத உள்ளடக்கத்தின் எந்தவொரு பயன்பாடும், பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரைச் சட்டங்களை மீறுவதாக இருக்கலாம், மேலும் BibleProject இன் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி இது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்

பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை TBP ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தால் மற்றும் ஏற்கும் அளவிற்கு, வலைத்தளத்தில் கருத்துக்கள், புகைப்படங்கள் அல்லது பிற உள்ளடக்கங்களை வெளியிட, அனுப்ப, சமர்ப்பிக்க அல்லது பதிவிட ("பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்") நீங்கள் வாய்ப்புக் கொண்டிருப்பீர்கள், அவற்றைப் பொதுமக்களால் அணுகவும் பார்க்கவும் முடியும். உங்களால் பதிவிடப்பட்ட எந்தவொரு பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தையும் பொறுத்து, பின்வருவனவற்றை நீங்கள் குறித்துக்காட்டுகிறீர்கள் (i) உள்ளடக்கத்தை நீங்கள் தான் உருவாக்கினீர்கள் மற்றும் அதற்கான உரிமைகளை வைத்திருக்கிறீர்கள் அல்லது அத்தகைய உள்ளடக்கத்தைப் பதிவிடுவதற்கான உரிமையாளரின் வெளிப்படையான அனுமதியைப் பெற்றுள்ளீர்கள், மற்றும் (ii) அந்த உள்ளடக்கம் வேறு எந்த நபரின் அல்லது நிறுவனத்தின் உரிமைகளையும் மீறவில்லை (பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் அல்லது தனியுரிமைகள் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் இன்ன பிற உரிமைகள்) அல்லது பொருந்தும் எந்தவொரு சட்டங்கள், விதிகள் அல்லது ஒழுங்குமுறைகள், இந்தப் பயன்பாட்டு விதிமுறைகள் அல்லது பதிவிடப்பட்ட எங்களின் பிற எந்தவொரு கொள்கைகளை மீறவில்லை. கூடுதலாக, பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கக்கூடாது:

  • பொய்யான, தீங்கான, அவதூறான, ஆபாசமான, தொந்தரவளிக்கும், அச்சுறுத்தும், பாரபட்சமான, மூடப் பிடிவாதமிக்க, வெறுப்புமிக்க, வன்முறையான, கொச்சையான, கேவலமான, பாலியல்ரீதியான அல்லது அவமதிப்பான, பொருத்தமற்ற, சேதப்படுத்தும், சட்டவிரோதமான, சீர்குலைக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடாது;

  • TBP இன் அல்லது பிறரின் ஏதாவது சட்ட உரிமைகளை மீறுதல், பொருந்தும் சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளின் கீழ் உரிமையியல் அல்லது குற்றவியல் பொறுப்புக்கு வழிவகுக்கும் அல்லது ஏதாவது சட்டவிரோத நடவடிக்கை அல்லது சட்டவிரோதச் செயலை ஊக்குவிக்கும், சார்பாக பேசும் அல்லது அதற்கு உதவும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடாது;

  • எந்தவொரு நபருக்கும் தீங்கு அல்லது சொத்து இழப்பு அல்லது சேதத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்துவதாக அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது;

  • பிறரின் தனிப்பட்ட தகவல்களான அவர்களின் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூகப் பாதுகாப்பு எண், நிதிநிலை தகவல்கள், அல்லது அந்த நபரைக் கண்காணிக்க, தொடர்புகொள்ள, அல்லது ஆள்மாறாட்டம் செய்யப் பயன்படுத்தக்கூடிய பிற ஏதாவது தகவல்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கக்கூடாது;

  • BibleProject அல்லது பிற எந்தவொரு நபரின் காப்புரிமை, வர்த்தக முத்திரை, வர்த்தக இரகசியம், பதிப்புரிமை, ஒப்பந்தம் அல்லது பிற அறிவுசார் சொத்து அல்லது பிற தனியுடைமை உரிமைகள் எதையும் மீறுவதாக இருக்கக் கூடாது;

  • பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலமாகவோ, தனிப்பட்ட தகவல்களைக் கேட்பதன் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்க அல்லது அவர்களைச் சுரண்டிப் பயன்படுத்த முயற்சிப்பதாக இருக்கக் கூடாது;

  • BibleProject உள்ளிட்ட, எந்தவொரு நிறுவனம் அல்லது நபருடன் உங்களின் அடையாளம் அல்லது உங்களின் தொடர்பைத் திரித்துக் கூறுவதாக இருக்கக் கூடாது;

  • எந்தவொரு வகையிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிகள், பயனர் பெயர்கள், அல்லது கடவுச்சொற்களைச் சேகரிக்க முயற்சிப்பதாக இருக்கக் கூடாது;

  • சங்கிலி தொடர் கடிதங்கள், மொத்தமான அல்லது தேவையற்ற மின்னஞ்சலைத் தானியக்கமாக அல்லது தானியக்கமின்றி அனுப்ப முயற்சித்தல், TBP அல்லது வலைப்பின்னல்கள் அல்லது வலைத்தளத்துடன் தொடர்புடைய சேவைகளின் மீது தேவையற்ற சுமையை உருவாக்குதல் அல்லது இடையூறு செய்தல் அல்லது குறுக்கிடுதல், அல்லது எங்கள் கணினிகள் அல்லது உபகரணத்தில் அல்லது மூன்றாம் தரப்பினரின் கணினிகள் அல்லது உபகரணத்தில் ஸ்பைவேர், மால்வேர் அல்லது பிற கணினி நிரல்களை நிறுவுதல் அல்லது நிறுவ முயற்சித்தல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது;

  • போட்டிகள், சூதாட்டங்கள் அல்லது பிற விற்பனை முயற்சிகள், பண்டமாற்றுகள், விளம்பரம் அல்லது விற்பனைச் சலுகைகள் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடாது; அல்லது 

  • எங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் TBP ஆல் தீர்மானிக்கப்பட்ட படி ஆட்சேபணைக்குரியதாக அல்லது குடும்பங்களுக்கு நட்பில்லாததாக இருத்தல் கூடாது.

வலைத்தளத்தில் நீங்கள் பதிவிடும் மற்றும் பிற பயனர்களிடம் நீங்கள் வழங்கும் தகவல்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களின் முழுப் பெயர், தொலைபேசி எண், தெரு முகவரி, மின்னஞ்சல் முகவரி அல்லது உங்களை அடையாளப்படுத்தும் அல்லது உங்களைக் கண்டுபிடிக்க அல்லது உங்களின் அடையாளத்தைத் திருட தெரியாதவர்களுக்கு உதவும் பிற தகவல்களை நீங்கள் வெளிப்படையாகப் பதிவிடுவதை TBP ஊக்குவிப்பதில்லை. உங்களின் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்திற்கும், அதை இணையத்தில் பதிவிடுவதால் ஏற்படும் விளைவுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள். வலைத்தளம் மூலமாக நீங்கள் தொடர்பு கொள்ளும் பிற பயனர்களைக் கையாளுவதுடன் தொடர்புடைய அனைத்து ஆபத்துகளையும் நீங்களே ஏற்கிறீர்கள், வலைத்தளத்தில் பதிவிடப்படும் ஏதாவது பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரல்கள் அல்லது பொறுப்பிலிருந்தும் மற்றும் எந்தவொரு பிற பயனர்களின் நடத்தை தொடர்புடையதாக எந்தவொரு கோரல்களிலிருந்தும் சட்டத்தால் அனுமதிக்கப்படும் அளவிற்கு நீங்கள் எங்களை விடுவிக்கிறீர்கள்.

முன்னறிவிப்பு எதுவுமின்றி எந்தக் நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைக் கண்காணிக்க, மீளாய்வு செய்ய, சோதனையிட, பதிவிட, நீக்க, நிராகரிக்க, திருத்த அல்லது சேமிக்க நாங்கள் உரிமை கொண்டுள்ளோம், ஆனால் அது எங்களுடைய கடமையல்ல. உங்களுக்கும் மற்ற ஏதாவது பயனருக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் உரிமை கொண்டுள்ளோம், மேலும் பிற பயனர்களுடனான உங்களின் எந்தவொரு உரையாடல் அல்லது சச்சரவுக்கும் அல்லது எந்தவொரு பயனரின் செயல் அல்லது செயலின்மைக்கும் நாங்கள் பொறுப்பில்லை. வலைத்தளத்தில் உங்களின் நடத்தைக்கும், மற்ற பயனர்களுடனான உங்களின் உரையாடல்களுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.

பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் இந்த விதிமுறைகளை மீறுகிறது அல்லது ஆட்சேபத்திற்குரியதாக இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளிட்ட எந்தவொரு காரணத்திற்காகவும் எங்களின் தனிப்பட்ட விருப்பப்படி அறிவிப்பு ஏதுமின்றி பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை நாங்கள் நிராகரிக்கலாம், மாற்றலாம் அல்லது நீக்கலாம். பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் எதையும் நாங்கள் ஆதரிப்பதில்லை, மேலும், பதிவிடப்பட்ட பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் எங்களின் கருத்துகள், பார்வைகள் அல்லது ஆலோசனைகளைப் பிரதிபலிப்பதில்லை. வலைத்தளத்தில் அல்லது வலைத்தளம் மூலமாக, நீங்கள் அல்லது ஏதாவது மற்ற பயனர் அல்லது மூன்றாம் தரப்பினர் பதிவிடும் அல்லது அனுப்பும் எந்தவொரு பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்திற்கும் நாங்கள் பொறுப்பில்லை மற்றும் பொறுப்பேற்க மாட்டோம், எந்தவொரு பயனர் அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட பரிமாற்றங்கள், தகவல்தொடர்புகள் அல்லது உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு செயலுக்கும் செயலின்மைக்கும் நாங்கள் எந்தவொரு பொறுப்பும் ஏற்கமாட்டோம்.

வலைத்தளப் பாதுகாப்பு

பின்வருவன போன்ற, வலைத்தளத்தின் பாதுகாப்பு அம்சங்களை மீறுவதிலிருந்து அல்லது மீற முயற்சிப்பதிலிருந்து நீங்கள் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளீர்கள்:

  • உங்களுக்கானதாகக் கருதப்படாத தரவுகளை அணுகுதல் அல்லது உங்களுக்கு அணுக அங்கீகாரம் இல்லாத சேவையகத்தினுள் அல்லது கணக்கினுள் நுழைதல்;

  • நீங்கள் அவ்வாறு செய்ய நாங்கள் எழுத்துப்பூர்வமாக வெளிப்படையாக அங்கீகாரம் வழங்காத வரை, அமைப்பு அல்லது வலைப்பின்னலின் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஆய்வு செய்ய, ஸ்கேன் செய்ய அல்லது சோதிக்க முயற்சித்தல் அல்லது பாதுகாப்பு அல்லது அங்கீகார நடவடிக்கைகளை மீற முயற்சித்தல்;

  • வைரசைச் சமர்பித்தல், சுமையைக் கூட்டுதல் (ஓவர்லோடிங்), தரவுகளை வெள்ளமாக அனுப்புதல் (பிளட்டிங்), ஸ்பேமிங், ஒரே முகவரிக்கு அதிக அளவிலான மின்னஞ்சலை அனுப்புவது (மெயில் பாம்பிங்) அல்லது செயலிழக்கச் செய்வது போன்ற வழிகளில், ஏதாவது பயனர், ஹோஸ்ட் அல்லது வலைப்பின்னலிற்கான சேவையில் குறுக்கிட முயற்சித்தல்; அல்லது 

  • ஏதாவது மின்னஞ்சல் அல்லது செய்திக்குழு பதிவில் ஹெட்டர் தகவலின் ஏதாவது பகுதி அல்லது ஏதாவது TCP/IP பேக்கட் ஹெட்டரில் மோசடி செய்து, தயாரிப்புகள் அல்லது சேவைகளின் விளம்பரம் உட்பட, கோரப்படாத மின்னஞ்சலை அனுப்புதல்.

வலைத்தளம் அல்லது வலைத்தளத்தில் நடைபெறும் ஏதாவது செயல்பாடு முறையாக வேலை செய்வதுடன் குறுக்கிடுவதற்காக அல்லது குறுக்கிட முயற்சிப்பதற்காக எந்தவொரு சாதனத்தையும், மென்பொருளையும் அல்லது வழக்கத்தையும் பயன்படுத்தமாட்டீர்கள் என்று இதன்மூலம் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த வலைத்தளத்தில் இயங்க அல்லது தேட, இந்த வலைத்தளத்தில் நாங்கள் கிடைக்கச் செய்யும் தேடு பொறி மற்றும் தேடல் முகவர்கள் மற்றும் Chrome, Firefox, Safari அல்லது Edge போன்ற பொதுவாகக் கிடைக்கும் மூன்றாம் தரப்பு இணைய உலாவிகளைத் தவிர்த்து, பிற எந்த பொறி, மென்பொருள், கருவி, முகவர் அல்லது பிற சாதனம் அல்லது முறைமைகளைப் (உலாவிகள், ஸ்பைடர்கள், ரோபோக்கள், அவதார்கள் அல்லது நுண்ணறிவு முகவர்கள் உட்பட) பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த முயற்சிக்கவோ மாட்டீர்கள் என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

எங்களின் அமைப்பு அல்லது வலைப்பின்னல் பாதுகாப்பை நீங்கள் மீறினால், உரிமையியல் அல்லது குற்றவியல் பொறுப்புகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அத்தகைய மீறல்களை உள்ளடக்கிய நிகழ்வுகளை நாங்கள் விசாரணை செய்வோம். அத்தகைய மீறல்களில் ஈடுபட்ட பயனர்களின் மீது வழக்குத் தொடர்வதற்காகச் சட்ட அமலாக்க அதிகாரிகளை ஈடுபடுத்தலாம் அல்லது ஒத்துழைக்கலாம்.

வலைத்தளப் பயன்பாட்டை மாற்றுதல், இடைநிறுத்தல் அல்லது முடித்தல்

குறிப்பிட்ட அம்சங்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது அல்லது ஒட்டுமொத்தமாக வலைத்தளத்தை நிறுத்துவதன் மூலம், எங்களின் தனிப்பட்ட விருப்பப்படி, அறிவிப்பு அல்லது பொறுப்பு ஏதுமின்றி, எந்த நேரத்திலும் அல்லது அவ்வப்போது வலைத்தளத்தின் எந்தவொரு அம்சத்தையும் மாற்ற, இடைநிறுத்தம் செய்ய அல்லது நிறுத்த நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். அவ்வப்போது, வலைத்தளத்தின் குறிப்பிட்ட அல்லது அனைத்து அணுகலையும் நாங்கள் தடை செய்யலாம். எங்களின் தனிப்பட்ட விருப்பப்படி ஏதாவது காரணத்திற்காக அல்லது காரணம் ஏதுமின்றி, அறிவிப்போ அல்லது பொறுப்போ ஏதுமில்லாமல், உங்கள் கணக்கை நிறுத்த அல்லது இடைநிறுத்தம் செய்ய அல்லது வலைத்தளத்தின் உங்கள் பயன்பாடு அல்லது அணுகலைத் தடை செய்ய நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். அதற்கேற்ப, ஏதாவது காரணத்திற்காக, அறிவிப்பு ஏதுமின்றி, எந்த நேரத்திலும் எந்தவொரு காலகட்டத்திற்கும் வலைத்தளம் முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

வலைத்தளத்தின் ஏதாவது அம்சத்தை நாங்கள் இடைநிறுத்தம் செய்தால் அல்லது நிறுத்தினால் அல்லது உங்கள் கணக்கை நிறுத்தினால், ஏதாவது தகவல்களையோ உள்ளடக்கத்தையோ உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் பொறுப்பல்ல. உங்கள் கணக்கில் அல்லது உங்கள் கணக்குடன் தொடர்புடையதாகச் சேமிக்கப்பட்டுள்ள அளவிற்கு உங்களின் மற்ற விருப்பங்களையும் ஆர்வங்களையும் நாங்கள் நீக்கலாம். அந்தத் தகவலுக்கு நீங்கள் வழங்கும் மதிப்பைக் கருதாமல் நாங்கள் நீக்கும் எந்தவொரு தகவல் தொடர்பாகவும் உங்களுக்கு மீட்புரிமை இல்லை, மேலும் எங்கள் சேவையகங்களில் சேமிக்கப்பட்டுள்ள உங்களின் எந்தவொரு தகவலுக்கும் நீங்கள் கூறக்கூடிய எந்தவொரு மதிப்பையும் நாங்கள் வெளிப்படையாக ஏற்க மறுக்கிறோம்.

தனியுரிமை மற்றும் தகவல் தொடர்புகள்

தனியுரிமை அறிவிப்பு. நீங்கள் எங்களின் தனியுரிமை அறிவிப்பைப் படித்துப் புரிந்துகொண்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களின் தனியுரிமை அறிவிப்பை எந்த நேரத்திலும் மீள்பார்வை செய்யலாம்.

மின்னணு தகவல் தொடர்புக்கான ஒப்புதல் மின்னஞ்சல் மூலமாகவோ, வலைத்தளத்தில் பதிவிடப்படும் அறிவிப்பு மூலமாகவோ, அல்லது எங்களின் தனிப்பட்ட விருப்பப்படி எங்களால் தீர்மானிக்கப்படும் பிற மின்னணு முறைகள் மூலமாகவோ, எங்களிடமிருந்து தகவல் தொடர்புகளை மின்னணு முறையில் பெற நீங்கள் ஒப்புதலளிக்கிறீர்கள். அதுபோன்ற மின்னணு தகவல் தொடர்புகள் மூலமாக எழுத்துப்பூர்வமாக நாங்கள் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பு, வெளிப்படுத்தல், ஒப்பந்தம் அல்லது பிற தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கான எந்தவொரு தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதுபோன்ற மின்னணு தகவல் தொடர்புகளுக்கு நீங்களோ உங்களின் இணைய வழங்குநரோ பயன்படுத்தும் எந்தவொரு தானியங்கி வடிகட்டிக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

மூன்றாம் தரப்பினர் வழியாக உங்கள் தகவல்களை அணுகுதல். நீங்கள் எங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காகப் பதிவு செய்யும்போது அல்லது அவற்றைப் பயன்படுத்தும் போது, உங்களைக் குறித்து மூன்றாம் தரப்பினரால் சேகரிக்கப்படும் தகவல்களை அணுகுவதற்கான அனுமதியை நீங்கள் எங்களுக்கு வழங்குகிறீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் Facebook கணக்கை இணைக்கலாம், இது அந்தக் கணக்குகளிலிருந்து (உங்களின் முழுப் பெயர் மற்றும் மின்னஞ்சல் போன்ற) தகவல்களைப் பெற எங்களை அனுமதிக்கிறது. அந்தச் சேவைகளிலிருந்து நாங்கள் பெறும் தகவல்கள் பெரும்பாலும் உங்களின் அமைப்புகள் அல்லது அவர்களின் தனியுரிமை அறிவிப்புகளைச் சார்ந்துள்ளன, எனவே உங்கள் அமைப்புகளைச் சரிபாருங்கள்.

ஆளுகைச் சட்டம்

BibleProject, அமெரிக்காவில் உள்ள அதன் அலுவலகங்களிலிருந்து வலைத்தளத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இயக்குகிறது. வலைத்தளம் மற்றும் இங்குள்ள உள்ளடக்கங்களின் பயன்பாடு உள்ளிட்ட, தொடர்புடைய உரிமைகோரல்கள், அமெரிக்கா மற்றும் ஆரிகன் மாநிலச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. வேறொரு இடத்திலிருந்து வலைத்தளத்தை அணுக நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் சொந்த முயற்சியால் நீங்கள் அதனைச் செய்கிறீர்கள், மேலும் பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டங்களுடன் இணங்குவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

உத்தரவாதத்தின் பொறுப்புத் துறப்பு

BibleProject, அதன் வலைதளம் மற்றும் அதன் உள்ளடக்கத்தை "உள்ளது உள்ள படி" என்ற அடிப்படையில் வழங்குகிறது, மேலும் தலைப்பின் நிபந்தனைகள் அல்லது உத்தரவாதங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான வணிகத்தன்மை அல்லது பொருத்தக்கூடியதன்மைக்கான குறிப்பான உத்தரவாதங்கள், அல்லது தளங்கள் அல்லது அவற்றின் செயல்பாடு அல்லது உள்ளடக்கம் மீறப்படாமல் இருத்தல் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் பிற, எந்தவொரு குறிப்பீட்டையும் அல்லது உத்தரவாதங்களையும் எந்த வகையிலும், வெளிப்படையாகவோ அல்லது குறிப்பின் மூலமாகவோ அளிக்கவில்லை. உள்ளடக்கம் துல்லியமாகவும், முழுமையாகவும், நடப்பில் உள்ளதாகவும் இருக்க வேண்டுமென TBP நம்பினாலும், தளங்களில் அணுகக்கூடிய தகவல்கள் துல்லியமானவை, முழுமையானவை அல்லது நடப்பில் உள்ளவை என TBP குறித்துக் காட்டவோ உத்தரவாதமளிக்கவோ இல்லை. எங்கள் தளங்களின் கிடைக்கும்தன்மைக்கு TBP ஆல் உத்தரவாதம் அளிக்க முடியாது மேலும் எங்கள் தளங்களின் உங்கள் பயன்பாட்டிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட முடிவுகளுக்கும் நாங்கள் உறுதியளிப்பதில்லை. உங்களின் சொந்த இடரின் அடிப்படையிலேயே நீங்கள் எங்களின் தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள்.

எங்களால், எங்களின் முகவர்கள் அல்லது பிரதிநிதிகளால், பயனர்களால், எங்களுடைய தளத்துடன் தொடர்புடைய அல்லது தளத்தால் பயன்படுத்தப்படும் ஏதாவது உபகரணம் அல்லது நிரலாக்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, எங்கள் தளத்தில் அல்லது தளம் மூலமாக பதிவிடப்படும் எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உட்பட, வரம்புகளின்றி, எங்கள் தளத்தில் உள்ள எந்தவொரு உள்ளடக்கத்திற்கும், வெளிப்படையாகவோ அல்லது குறிப்பின் மூலமாகவோ, நாங்கள் எந்த உத்தரவாதங்களையும் வழங்கவில்லை மற்றும் அவற்றிற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்கள் தளங்களில் பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம், அந்த வலைத்தளங்களின் உள்ளடக்கம், துல்லியம் அல்லது வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மேலும், அந்த வலைத்தளங்கள் துல்லியமாகவும் முழுமையாகவும் இருக்கிறதா என்று நாங்கள் விசாரிக்கவோ, கண்காணிக்கவோ அல்லது சரிபார்க்கவோ மாட்டோம். எங்கள் தளத்தில் ஏதேனும் இணைக்கப்பட்ட வலைத்தளம் சேர்க்கப்பட்டிருப்பது, இணைக்கப்பட்ட வலைத்தளத்திற்கான எங்கள் ஒப்புதல் அல்லது ஆதரவைக் குறிக்காது. இந்த மூன்றாம் தரப்பு தளங்களை நீங்கள் அணுகும்போது, உங்களின் சொந்த இடரின் அடிப்படையிலேயே அதை நீங்கள் செய்கிறீர்கள். எங்கள் தளத்தில் அல்லது எங்கள் தளம் மூலமாக பதிவிடப்படும் மூன்றாம் தரப்பு விளம்பரங்கள் அல்லது மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மேலும் அத்தகைய விளம்பரதாரர்களால் வழங்கப்படும் சரக்குகள் அல்லது சேவைகளுக்கும் நாங்கள் எந்தவொரு பொறுப்பும் ஏற்க மாட்டோம். எங்கள் தளத்தில் ஏதாவது பயனர் உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் உட்பட எங்கள் தளத்தின் எந்தப் பயனரின் (இணையத்தில் அல்லது இணையமில்லாமல்) எந்தவொரு செயலுக்கும் அல்லது விடுபடுதலுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. எந்தவொரு பயனர் தகவல் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிழை, விடுபடுதல், குறுக்கீடு, நீக்குதல், குறைபாடு, செயல்பாட்டில் அல்லது அனுப்புவதில் தாமதம், தகவல் தொடர்புத் தடம் செயலிழப்பு, திருட்டு அல்லது அழிவு அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது மாற்றம் ஆகிய எவற்றிற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் தளங்கள் அல்லது அவற்றின் உங்களின் பயன்பாடு தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளுக்கும், சேதத்திற்கும், காயத்திற்கும் அல்லது கோளாறுக்கும் நாங்கள் பொறுப்பல்ல (தகவல் தொடர்பு வலைப்பின்னல் அல்லது தடங்கள், கணினி இணைய அமைப்புகள், வைரஸ்கள் அல்லது பிற மால்வேர்கள், சேவையகங்கள் அல்லது வழங்குநர்கள், கணினி உபகரணங்கள், மென்பொருள் இணையத்தில் மற்றும் / அல்லது எங்கள் தளங்களில் தொழினுட்பச் சிக்கல்கள் அல்லது தரவு நெரிசல் காரணமாக ஏற்படும் ஏதாவது மின்னஞ்சல் தோல்வி, ஆகியவற்றிலிருந்து அல்லது ஆகியவற்றின் மூலமாக எழுவன உட்பட). எங்களின் தளங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, ஏதாவது பயனர்களின் நடத்தை காரணமாக (இணையத்திலோ இணையமின்றியோ) அல்லது வேறு வழியில் ஏற்படும், தனிப்பட்ட காயம் அல்லது மரணம் உள்ளிட்ட, எந்தவொரு இழப்பிற்கும் அல்லது சேதத்திற்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம். எங்கள் தளங்களை நீங்கள் பயன்படுத்துவதன் (அல்லது பயன்படுத்த முடியாததன்) விளைவாக, உங்களின் கணினி, மென்பொருள், மோடம், தொலைபேசி அல்லது பிற உடைமைகளில் ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பல்ல. எங்களின் தளத்தின் மூலமாகத் தகவல்களை உங்களால் அணுக முடியவில்லை என்றால் அதற்கு நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்க மாட்டோம். குறிப்பிட்ட உத்தரவாதங்கள் மற்றும்/அல்லது கடப்பாடுகளுக்கான விலக்கு அல்லது வரம்பைச் சில மாநிலங்கள் அனுமதிப்பதில்லை, எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில வரம்புகள் அல்லது விலக்குகள் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.

பொறுப்பின் வரம்பு

உள்ளடக்கங்களின் பயன்பாடு, பயன்படுத்த இயலாமை, நகலெடுத்தல் அல்லது காட்சிப்படுத்தலிலிருந்து எழும் அல்லது அது தொடர்பான ஒப்பந்தம், கண்டிப்பான பொறுப்பு, கவனக்குறைவு, அல்லது பிற தீங்கான செயல்பாடுகள் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் எந்தவொரு செயல்பாட்டின் வடிவத்தையும் கருதாமல் ஏற்படும் பயன்பாடு, தரவு, இலாபம் அல்லது நல்லெண்ண இழப்பு, வணிகத் தடங்கல், அல்லது கணினி செயலிழப்பு அல்லது கோளாறு உள்ளிட்டவை மட்டுமல்லாமல் இன்ன பிற வகைச் சேதங்கள் அல்லது சிறப்பு, மறைமுக, முன்மாதிரி, அல்லது விளைவு சார் சேதங்கள் உட்பட வரம்புகளின்றி, எங்களின் தளங்கள் அல்லது உள்ளடக்கத்தின் பயன்பாட்டினால் எழும் அல்லது அவை தொடர்பான எந்தவொரு சேதங்களுக்கும், உங்களுக்கோ வேறு எந்த நபருக்கோ, எந்தச் சூழ்நிலையிலும், BibleProject அல்லது அதன் ஊழியர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், முகவர்கள், வழங்குநர்கள் அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் எவரும் பொறுப்புக் கொண்டிருக்கமாட்டார்கள். ஒப்பந்த மீறல், உத்தரவாத மீறல், அவதூறு, கண்டிப்பான பொறுப்பு, பொய்யறிக்கை, தயாரிப்புகள் மீதான பொறுப்பு, சட்ட மீறல்கள் (ஒழுங்குமுறைகள் உட்பட), கவனக்குறைவு, மற்றும் பிற தீங்குகள், அத்துடன் மூன்றாம் தரப்பு உரிமைகோரல்கள் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் இன்ன பிற, அனைத்து உரிமைகோரல்களுக்கும் இந்த வரம்பு பொருந்தும்.

மேலே கூறப்பட்ட விதிகளை மட்டுப்படுத்தாமல், எந்தவொரு உரிமைகோரலுக்காகவும் உங்களுக்கு அல்லது ஏதாவது நபருக்கு BibleProject கடன்பட்டிருக்கும் ஒட்டுமொத்தப் பொறுப்புக்கான வரம்பானது கடந்த 12 மாதங்களில் BibleProject க்கு நீங்கள் செலுத்திய அதிகபட்சத் தொகைக்கு வரம்பிடப்படும்.

இழப்பீடு

நீங்கள் இழப்பீடு அளிக்கவும், (I) எங்களின் விதிமுறைகளை மீறி எங்கள் தளங்களை நீங்கள் பயன்படுத்துவது, (II) எங்களின் விதிமுறைகளை நீங்கள் மீறுவது, அல்லது (III) எங்களின் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள உங்களின் குறிப்பீடுகள் மற்றும் உத்தரவாதங்களை மீறுவது ஆகியவை தொடர்பான அல்லது அவற்றிலிருந்து எழும் வழக்கறிஞர் கட்டணங்கள், நிலுவைத் தொகை உள்ளிட்டவை மட்டுமல்லாமல் எந்தவொரு இழப்பு, பொறுப்பு, செலவு, செலவினம், உரிமைகோரல், சேதங்கள், அல்லது கோரிக்கையிலிருந்தும் எங்களை, எங்கள் துணை நிறுவனங்களை மற்றும் எங்களின் இணை நிறுவனங்களை, மற்றும் அவற்றின் உறுப்பினர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், முகவர்கள், கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களைப் பாதிப்பில்லாமல் வைக்கவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளுக்கான திருத்தங்கள்

முன்னறிவிப்பு ஏதுமின்றி இந்தப் பதிவைப் புதுப்பிப்பதன் மூலம் இந்த விதிமுறைகளைத் திருத்துவதற்கான உரிமையை BibleProject கொண்டுள்ளது. உங்களுக்கு முன்னறிவிப்பு வழங்கி அல்லது வழங்காமல், எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை நாங்கள் மாற்றியமைக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம், மேலும் இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளில் செய்யப்படும் அதுபோன்ற எந்த மாற்றங்களும் இந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டதும் உடனடியாக எந்தவொரு முந்தைய பயன்பாட்டு விதிமுறைகளின் மேலோங்குவதாகவும் பதிலீடாகவும் அமையும். இந்த விதிமுறைகளின் ஏதாவது பகுதி செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்படும் போது, இந்த விதிமுறைகளின் எஞ்சிய பகுதிகள் முழுச் செயல்பாட்டிலும் விளைவிலும் இருக்கும், மேலும் செயல்படுத்த முடியாத பகுதி சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்குச் செயல்படுத்த முடியும் வகையில் திருத்தப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதுபோன்ற எந்தவொரு திருத்தங்களுக்கும் கட்டுப்பட்டிருக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அப்போதைய நடப்புப் பயன்பாட்டு விதிமுறைகளைத் தீர்மானிக்க, இந்தப் பக்கத்தை அவ்வப்போது பார்வையிட நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

குழு நடவடிக்கை விலக்கு

எந்தவொரு உரிமைக்கோரல், சர்ச்சை அல்லது சச்சரவு தொடர்பில் BibleProject க்கு எதிராக எந்தவொரு குழு நடவடிக்கை வழக்கு தொடரும் அல்லது அதில் பங்கேற்கும் எந்தவொரு உரிமைக்கும் இதன் மூலம் நீங்கள் விலக்களிக்கிறீர்கள், மேலும் எங்கெல்லாம் பொருந்துகிறதோ அங்கு, BibleProject க்கு எதிராக நடந்து வரும் எந்தவொரு குழு நடவடிக்கை விசாரணையிலிருந்தும் விலக இதன்மூலம் நீங்கள் ஒப்புக் கொள்கிகிறீர்கள்.

நடுவர் தீர்ப்பு ஒப்பந்தம்

குறிப்பு: இந்த நடுவர் தீர்ப்பு ஒப்பந்தமானது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

நீதிமன்றத்தில் அல்லது நீதிபதிக்கு முன் உரிமைகோரல்களை வழக்காடுவதற்கான அல்லது ஒரு உரிமைகோரலுடன் தொடர்புடையதாக குழு நடவடிக்கை அல்லது பிரதிநிதித்துவ நடவடிக்கையில் பங்கேற்பதற்கான எந்தவொரு உரிமைகளையும் கைவிடுவதற்கு நீங்களும் TBP உம் ஒப்புக்கொள்கிறீர்கள். கண்டறிதலுக்கான அணுகல் போன்ற நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மற்ற உரிமைகள். நடுவர் தீர்ப்பில் கிடைக்காமல் போகலாம் அல்லது வரம்பிடப்பட்டிருக்கலாம்.

இந்தப் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் அவற்றின் விளக்கம் அல்லது மீறல், முடித்தல் அல்லது அதன் செல்லுபடி தன்மை ஆகியவற்றிலிருந்து எழும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எந்தொரு உரிமைகோரல் அல்லது சச்சரவு, இந்த நடுவர் தீர்ப்பு விதிகளின் செல்லுபடி தன்மை, நோக்கம் அல்லது செயல்படுத்தக்கூடிய தன்மை குறித்த சச்சரவுகள் உள்ளிட்ட, இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளின் விளைவாக ஏற்படும் உறவுகள் (கூட்டாக, "உள்ளடங்கும் சச்சரவுகள்"), நீதிமன்றத்திற்குப் பதிலாக, பிணைக்கும், தனிப்பட்ட நடுவர் தீர்ப்பாயம் மூலமாகப் பிரத்தியேகமாகத் தீர்த்து வைக்கப்படும், மேலும், இது போர்ட்லேண்ட், ஆரிகன் என்ற இடத்திலோ அல்லது தரப்பினரால் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு இடத்திலோ நடைபெறும். American Arbitration Association ("AAA") என்ற அமைப்பினால் அதன் விதிகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் நடுவர் தீர்ப்பாயம் நடத்தப்படும். இந்த நடுவர் தீர்ப்பு ஒப்பந்தத்தின் விளக்கம் மற்றும் அமலாக்கத்தைக் கூட்டாட்சி நடுவர் தீர்ப்புச் சட்டம் நிர்வகிக்கிறது. மாற்றாக, உங்களின் உரிமைகோரல்கள் சிறு உரிமைகோரல் நீதிமன்றத்திற்குத் தகுதி பெற்று, அத்தகைய நீதிமன்றத்தில் இருக்கும், மற்றும் ஒரு தனிநபர் (குழு அல்லாத, பிரதிநிதித்துவம் அல்லாத) அடிப்படையில் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படும் வரை, நீங்கள் சிறு உரிமைகோரல் நீதிமன்றத்தில் உங்களின் உரிமைகளைக் கோரலாம்.

எந்தவொரு நடுவர் தீர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, அதைத் தொடங்கும் தரப்பு நடுவர் தீர்ப்பாயத்திற்குத் தாக்கல் செய்யவிருப்பதாகக் குறைந்தது 60 - நாட்களுக்கு முன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மற்ற தரப்பிடம் வழங்க வேண்டும். TBP, அத்தகைய அறிவிப்பை மின்னஞ்சல் மூலமாக எங்கள் கோப்புகளில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும், மேலும், நீங்கள் அத்தகைய அறிவிப்பை webmaster@jointhebibleproject.com என்ற முகவரியில் மின்னஞ்சல் மூலமாக வழங்க வேண்டும். அத்தகைய 60-நாள் அறிவிப்பு காலத்தில், எந்தவொரு உள்ளடங்கும் சச்சரவுகளையும் பரஸ்பரக் கலந்துரையாடல்கள் மூலம் இணக்கமாகத் தீர்ப்பதற்குத் தரப்புகள் முயற்சிக்கும். அத்தகைய இணக்கமான தீர்வு தோல்வியுற்று அறிவிப்பு காலம் காலாவதியானால், இருவரில் எந்த ஒரு தரப்பினரும் நடுவர் தீர்ப்பைத் தொடங்கலாம்.

சட்டத்தின் கீழ் அல்லது இணையான நீதிமன்றத்தில் கிடைக்கக்கூடிய எந்தவொரு நிவாரணத்தையும் வழங்குவதற்கான அதிகாரம் நடுவருக்கு உள்ளது, மேலும் நடுவர்(களால்) வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பும் இறுதியானதாகவும் தரப்பினர் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும். நடுவர் தீர்வு வழங்கிய பின் தீர்ப்பு, தகுதியுடைய அதிகார எல்லைக்குள் எந்தவொரு நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்படலாம். சச்சரவுகளை நடுவர் தீர்ப்புக்கு உட்படுத்தும் மேற்கூறிய கடமை இருந்த போதிலும், தகுதியுடைய அதிகார எல்லைக்குள் எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தும் தடை உத்தரவு அல்லது அதற்குச் சமமான நிவாரணத்தை எந்த நேரத்திலும் பெறுவதற்கு ஒவ்வொரு தரப்பும் உரிமை கொண்டுள்ளது. பொருந்தக்கூடிய சட்டத்தையும் இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளின் விதிகளையும் நடுவர் பயன்படுத்துவார், அவ்வாறு செய்யத் தவறுவது நடுவர் தீர்ப்பு அதிகாரத்தை மிஞ்சியதாகக் கருதப்பட்டு, நீதித்துறை மறுஆய்வுக்கான காரணமாக அமையும். எந்தவொரு உள்ளடங்கும் சச்சரவையும் குழு, பிரதிநிதி அல்லது தனியார் வழக்கறிஞர் நடவடிக்கையாக நடுவர் தீர்ப்புக்கு உட்படுத்துவதற்கான உரிமை TBP க்கோ உங்களுக்கோ இல்லை, மேலும் குழு, பிரதிநிதி அல்லது தனியார் வழக்கறிஞர் பொது அடிப்படைகளில் விசாரிக்க நடுவர்(களுக்கு) அதிகாரம் இல்லை. இந்தப் பிரிவில் நடுவர் தீர்ப்பு ஒப்பந்தத்தின் ஏதாவது விதி சட்டவிரோதமானதாக அல்லது செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால், மீதமுள்ள நடுவர் தீர்ப்பு விதிமுறைகள் முழுமையாக செல்லுபடியாவதாகவும், கட்டுப்படுத்துவதாகவும், செயல்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் (ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் குழு, பிரதிநிதி அல்லது தனியார் வழக்கறிஞரின் பொதுவான நடுவர் தீர்ப்பு இருக்காது). இந்தப் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய பரிவர்த்தனைகள் கூட்டாட்சி நடுவர் தீர்ப்புச் சட்டம் 9 U.S.C. பிரிவு. 1-16 (FAA) -க்கும், மற்றும் பொருந்தும் இடங்களில் ஆரிகன் மாநிலத்தின் சட்டங்களுக்கும் உட்பட்டவை மற்றும் அவற்றால் நிர்வகிக்கப்படுபவை.

 

By using this website, I acknowledge that I am 16 years of age or older, and I agree to the Terms and Conditions and Privacy Policy.
Under 16?
Accept
For advanced bible reading tools:
Login  or  Join
Which language would you like?